Good Shepherd Church, Idaiyerkadu

Good Shepherd Church, Idaiyerkadu

148 8 Religious Organization

275311 gschurch100@gmail.com www.gschurch.webs.com

Idaiyerkadu, Tuticorin, India - 628802

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

8 Reviews

5
100%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Good Shepherd Church, Idaiyerkadu in Idaiyerkadu, Tuticorin

தோற்றம்:
1833 ம் ஆண்டு CMS மிஷனெரியாக கணம் C.T.E.ரேனியஸ் ஐயரவர்களால் இடையர்காடு சபை உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட C.M.S. ஊழியத்தை 4 வட்டங்களாகப் (Circle) பிரித்தனர். 1.நல்லூர் 2.பாளையங்கோட்டை 3.சுவிசேசபுரம் 4.மெய்ஞானபுரம். இடையர்காடு சபை பாளையங்கோட்டை வட்டத்தை சார்ந்தது. இப்பகுதிகளில் கொற்கை பட்டணமாகக் காணப்பட்டுள்ளது. மற்ற அனைத்தும் சிற்றூரே. கொற்கை துறைமுகதிற்க்கும் பாண்டிய மன்னர்களின் காவலர் குடியிருப்பு பகுதியான காவல்காட்டிற்கும் இவ்வூர் இடைப்பட்டதால் இடையர்காடு என்ற பெயர் வந்துள்ளது.

சபை வளர்ச்சி:
இதற்கிடையில் விரைவாய்ப் பெருகி வந்த திருநெல்வேலி C.M.S.ஊழியத்தை மேலும் திறம்பட செய்ய தலமிஷனெரி பணித்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஒரு வட்டத்தில் அதின் பிரதான வட்ட மையம் என அழைக்கப்படும் தலமிஷனெரி அதில் குடியிருந்து சபைப் பணிகளை நிறைவேற்றி புது சபைகளை உருவாக்க வேண்டும். இதற்கிடையில் SPG மிஷன் நாசரேத் வட்டத்திலிருந்து சாயர்புரத்தை தனி வட்டமாக 1842ல் பிரித்தது. மேலும் SPG, CMS மிஷன்களை இணைக்க இரு சங்க மிஷனெரிகள் பாடுபட்டனர். இதன் விளைவாக எல்லைகளைச் சீரமைப்பு செய்தார்கள். அதன்படி நாச்சியபுரம், கூட்டாம்புளி, ராமசாமியபுரம், சிலுக்கன்பட்டி, புதுக்கோட்டை, புதியம்புத்தூர், சேர்வைகரன்மடம், சக்கம்மாள்புரம், வேப்பலோடை, இடையர்காடு இன்னும் பல சிறிய சபைகள் பாளையங்கோட்டை CMS வட்ட மிஷனெரியின் கண்காணிப்பிலிருந்து போப் ஐயருக்கு 1943-44 ல் மாற்றிக் கொடுக்கப்பட்டது. அதன்படி இடையர்காடு சபை SPG சபையாக மாற்றம் பெற்று சாயரபுரம் வட்டத்தில் இணைக்கப்பட்டது.

முதல் திருமுழுக்கு:
சாயர்புரத்தில் போப் ஐயரவர்களுக்கு 22 சபைகள் இருந்தன. இதில் முக்கியமான சபைகள் சுப்பிரமணியபுரம், செபத்தையபுரம், நடுவைக்குறிச்சி, செந்தியம்பலம், புளியநகர், இடையர்காடு, இருவப்பபுரம், சிறுத்தொண்ட நுல்லூர் ஆகும். அந்தந்த கிராமத்தில் தினமும் அவர்களுக்கு ஆராதனை நடத்தப்பட்டது. மூன்று மாதத்திற்குள் 1100 பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ சபையில் சேருவதற்கு ஆயத்தப்படலாயினர். குறிப்பாக சாயர்புரம், செபத்தையபுரம் தவிர மற்ற சபைகளில் ஒருவரும் திருமுழுக்கு பெறவில்லை. ஆகவே போப்திருமுழுக்கு பெறாதவர்களை கணக்கு எடுத்து அவர்களுக்கு திருமுழுக்கு பற்றிய போதனைகளைக் கொடுத்து இறுதியில் சில சபைகளில் சிலரை தகுதிப்படுத்தி அவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். அதன்படி திருமுழுக்கு இடையர்காடு சபையில் 17.11.1844 ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. முதல் கிறிஸ்தவர் ஏசுவடியான் என்பவர் மகன் முருகப்பன் ஆவார்.

ஆலயம்:
முதல் ஆலயம் ஒரு ஓலைகூரையில் 1843 முதல் 1850 வரை செயல்பட்டு வந்தது. இரண்டாம் ஆலயம் 1850 முதல் 1894 வரை ஒரு ஒட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. முதல் குருவானவர் Rev.ஞானபிரகாசம். மூன்றாம் ஆலயம் தற்போதுள்ள ஆலயம். இது சாயர்புரம் குருவானவர் கனம் ஆர்தர் ஜோசப் கார்டன் (A.J.கார்டன்) (1894-1909) ஐயரவர்களால் 25.01.1894ல் அப்போஸ்தலனகிய பரி.பவுல் குணப்பட்ட திருநாளில் அஸ்பாரமிடப்பட்டு, கட்டப்பட்டு 18.01.1908ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது இடையர்காடு சபையில் கணம் W.A. சிரோன் மணி அவர்கள் சர்க்கிள் குருவானவராக பணி செய்தார்கள். இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்குள் தூண்கள் இல்லாமல் அமைக்கப்பட்டு இருப்பதுதான். மேலும் 1961 ஆம் ஆண்டு ஆலய கோபுரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்திற்குள் மொசைக் தளம் 1967 இல் அமைக்கப்பட்டது. 1975 முதல் தனி சேகரமாக செயல்பட்டுவருகிறது. 2003 முதல் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது.

Popular Business in tuticorin By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.